மீண்டும் கார்த்தியுடன் கைகோர்க்கும் லிங்குசாமி..!



‘பையா’ வெற்றிக்குப்பின் லிங்குசாமி மீண்டும் கார்த்தியுடன் கைகோர்க்கவுள்ளார். தற்போது லிங்குசாமி சூர்யாவை வைத்து ‘அஞ்சான்’ படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து 2007-ல் வெளியான ‘பையா’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

அதிலுள்ள பாடல்களும் ரசிகர்கள் மனதில் பெறும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தொடங்கவுள்ளது.

’அஞ்சான்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் லிங்குசாமி இப்படத்தை எடுக்கவுள்ளார். ‘பையா’ வெற்றியைப்போல இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

20 நாட்களுக்கு ரூ.20 கோடி. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தீபிகா படுகோனே...!



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் ‘கத்தி’ திரைப்படத்தை அடுத்து ‘சிம்புதேவன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ப்ரியங்கா சோப்ராவிடம் முதலில் பேசப்பட்டது. ஆனால் ப்ரியங்கா சோப்ராவிற்கு வரும் 2016ஆம் ஆண்டு வரை கால்ஷீட் நிரம்பியிருப்பதால், விஜய் படத்திற்கு அவரால் கால்ஷிட் கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில் இயக்குனர் சிம்புதேவன், மும்பை சென்று தீபிகா படுகோனேவை நேரில் சந்தித்து பேசியதாக தெரிகிறது. தீபிகா படுகோனேவிடம் கதையை சொன்ன இயக்குனர் சிம்புதேவன், 20 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்று கூற, அதற்கு தீபிகா கேட்ட சம்பளத்தொகைதான் இயக்குனரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நாள் ஒன்று ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றும் 20 நாட்கள் கால்ஷீட் தேவையென்றால் ரூ.20 கோடி சம்பளம் தேவையென்றும் தீபிகா கூறியதால் சிம்புதேவன் அதிர்ச்சி அடைந்தார். தீபிகாவின் சம்பளத்தை கேள்விப்பட்டு விஜய்யும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

ஆறுமாத காலம் கால்ஷீட் கொடுக்கும் விஜய்க்கே ரூ.20 கோடி சம்பளம் என்ற நிலையில் 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ.20 கோடியா? என்ற அதிர்ச்சியில் உள்ளார் இயக்குனர் சிம்புதேவன்.

பின்னர் தயாரிப்பாளரின் ஆலோசனைப்படி கோலிவுட் கதாநாயகி ஒருவரையே தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமன்னா அல்லது ஹன்சிகாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

0 comments:

மாமியாரைவிட எனக்கு மணிரத்தினம் தான் முக்கியம் - ஐஸ்வர்யாராய் அதிரடி முடிவு...!



மாமியார் ஜெயா பச்சனின் எதிர்ப்பை மீறி மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை மணந்தபிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார் ஐஸ்வர்யாராய். அவரை மீண்டும் படத்தில் நடிக்க பல்வேறு இயக்குனர்கள் அழைப்புவிடுத்தனர்.

ஆனால் குழந்தை ஆரத்யாவை வளர்க்க வேண்டியதால் ரீ என்ட்ரி வாய்ப்பை ஏற்காமல் இருந்தார். குழந்தை வளர்ந்து பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்த நிலையில் அவர் மீண்டும் நடிக்க முடிவு செய்து சரியான வாய்ப்புக்காக காத்திருந்தார். ஆனால் மீண்டும் நடிக்கக்கூடாது என்று மாமியார் ஜெயா பச்சன் கூறியதால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.

மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்ய முடிவு செய்திருந்தார் ஐஸ்வர்யா ராய். இந்நிலையில மாமியாருடன் மனக்கசப்பு முற்றும் நிலை உருவானதால் மணிரத்னம் படத்திலிருந்து விலக எண்ணி இருந்தார்.

இதையடுத்து மணிரத்னமும் வேறு நடிகையை தேட முடிவு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஐஸ்வர்யாராய் கை ஓங்கியது. ரீஎன்ட்ரிக்கு ஓகே சொன்னார். இதையடுத்து மாமியார் ஜெயாபச்சன் கப் சிப் ஆனார்.

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பதை மணிரத்னத்தின் மனைவி சுகாசினி உறுதி செய்ததுடன் மகேஷ்பாபு, நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடிப்பதையும் உறுதி செய்தார். வரும் ஜூன் மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்று அவர் தெரிவித்திருக்கிறார். உளவாளி கதைக்கருவுடன் ஆக்ஷன் படமாக உருவாகும் இதன் ஷூட்டிங் இந்தியா மற்றும் சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

0 comments:

கோச்சடையானில் என் அப்பாவைவிட அனிமேஷன் தான் அதிகம் - சௌவுந்தர்யா..!



ரஜினிகாந்தின் நடிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக அவதார், டின்டின் படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்சரிங் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், படத்தின் இயக்குனர் சவுந்தர்யா மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கோச்சடையானில் என் தந்தை நடித்தது, படத்தை இயக்கும் நான் அவரது மகள் என்பதால் அல்ல. கதை மற்றும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதன்பிறகே நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை சிறப்பாக இயக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. என் தந்தையும் அனுமதி அளித்தார். எனது முதல் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு அவரது ஆசீர்வாதம் கிடைத்துள்ளது.

இது ஒரு கமர்ஷியல் படம் என்பதுடன் தொழில்நுட்பமும் புதிது. ஆனால், ரஜினிகாந்த் கதை போன்று இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கமர்ஷியல் படத்திற்கு நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டிருப்பது நமக்கு இதுவே முதல் முறையாகும்.

ராணா பட வேலைகளை தொடங்கியபோது என் தந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குணமடைந்து வந்த பின்னர் அவருக்கு உடல் அளவிலான அதிக அழுத்தங்களை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில், ராணா வரலாற்றுப் படம்.

கோச்சடையான் அதற்கு முந்தைய காலகட்டத்தின் படம். கோச்சடையான் ராணாவின் தந்தை. அதனால் கோச்சடையான் முதலில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், என் தந்தைக்கு அழுத்தத்தை குறைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்தோம். நேரடியாக காட்சிகளில் நடிப்பதை ஒப்பிடுகையில் இது எளிதானது.

இவ்வாறு சௌவுந்தர்யா கூறினார். 

0 comments:

அர்னால்டாக்கும் ஐ படத்துக்கும் என்னங்க சம்மந்தம்..? எதுக்கு இந்த வீண் விளம்பரம்..!



கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கமல்-அசின் இணைந்து நடித்த படம் தசாவதாரம். அந்த படத்தில் கமல் பத்து விதமான மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்திருந்தார்.

அப்படத்தின் ஆடியோ விழா சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானை வரவைத்து வெளியிட்டார்கள். அது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பதிவானது.

 அதையடுத்து, தசாவதாரம் படத்தை தயாரித்த அதே ஆஸ்கர் பிலிம்ஸ் தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாரித்து வரும் ஐ படத்தின் ஆடியோ விழாவையும் பிரமாண்டப்படுத்த முடிவு செய்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக, இந்த முறையும் ஒரு சர்வதேச நடிகரை ஐ படத்தின் ஆடியோ விழாவுக்கு அழைக்க அப்பட தயாரிப்பாளரான ரவிச்சந்திரன் முடிவு செய்திருக்கிறாராம்.

ஆனால் அந்த சர்வதேச பிரபலம் ஹாலிவுட் நடிகர் அர்னால்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது ஐ படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து கொண்டிருப்பதால், விரைவில் ஆடியோ விழா பற்றியும் அதில் கலந்து கொள்ளும் உலக பிரபலங்கள் பற்றியும் வெளியிட இருக்கிறார்களாம்.

0 comments:

ரஜினிகாந்த் வாழ்க்கை சினிமா படமாகிறது..! - அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார்...



ரஜினிகாந்த் வாழ்க்கை சினிமா படமாகிறது. தமிழ், இந்தியில் இப்படத்தை எடுக்கின்றனர்.

இதில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் நடிக்கிறார். இவர் பிரபல வில்லன் நடிகர் ஆவர். தமிழில் வில்லு, பில்லா, அசல், சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகராக உள்ளார்.

கவிதா, ராஜேஷ்யாம், மான் ராம்கோ உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். வர்ஷா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. டைரக்டர் பைசல்பை இயக்குகிறார்.

இந்த படத்துக்கு இந்தியில் மை ஹோ ரஜினி காந்த் என்றும் தமிழில் நானே ரஜினி காந்த் என்றும், பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.

ஆதித்யா மேனன் கூறும் போது ரஜினி வேடத்தில் இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அபூர்வமான அரிய வாய்ப்பு என்றார். இந்த படத்தை ரஜினிக்கு அர்ப்பணிப்பதாக டைரக்டரும் தயாரிப்பாளரும் தெரிவித்தனர்.

ரஜினி பஸ் கண்டக்டராக இருந்து சினிமாவில் அறிமுக மாகி சூப்பர் ஸ்டார் ஆனால் கண்டக்டராக பணியாற்றிய அவரது ஆரம்ப கால வாழ்க்கை சினிமாவில் சாதித்த சாதனைகள் படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.

ரஜினியின் இமயமலை பயணம் ஆன்மீக தொடர்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் படத்தில் இடம் பெறும் என்றார் இயக்குனர்.

0 comments:

சிவகார்த்திகேயனை வலம் வரும் முன்னனி நடிகைகள்...!



வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கும் படம் 'ரஜினி முருகன்'. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.


சமீபத்தில் திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா நடந்தது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டாகியுள்ளது.


தற்போது சிவகார்த்திகேயன் 'எதிர்நீச்சல்' பட இயக்குநர் துரைசெந்தில்குமார் இயக்கும் 'டாணா' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


'டாணா' படம் முடிந்ததும் 'ரஜினி முருகன்' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறாராம். இதைப் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டாரா யுவன்சங்கர்ராஜா?



இஸ்லாமியராக மதம் மாறிய பிறகு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, சென்னையில் இருப்பதே இல்லை என்றும், பெரும்பாலும் மலேசியாவில்தான் இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். வாய்ஸ் மிக்ஸிங் எனும் பாடல் ஒலிப்பதிவு நடைபெறும்போது மட்டும் சென்னைக்கு வரும் யுவன்சங்கர்ராஜா, ஒன்றிரண்டு நாட்கள் சென்னையில் தங்கிவிட்டு, மீண்டும் மலேசியா கிளம்பி விடுகிறாராம்.


இசையமைக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு பாடல் கம்போஸிங் செய்யும்போது சம்மந்தப்பட்ட படத்தின் இயக்குநரை மலேசியாவுக்கு வரச்சொல்கிறாராம் யுவன்சங்கர்ராஜா.


ஹரி இயக்கத்தில், விஷால் நடிக்க உள்ள புதிய படத்திற்கு யுவன்சங்கர்ராஜாதான் இசையமைப்பாளர். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதால், அதற்கு முன் அத்தனைப் பாடல்களையும் பதிவு செய்துவிட வேண்டும் என்று அவசரப்படுத்தினாராம் ஹரி. உடனே அவரையும்,


படத்தின் நாயகன் கம் தயாரிப்பாளர் விஷாலையும் மலேசியாவுக்கு வரச்சொன்ன யுவன்சங்கர்ராஜா, அங்கேயே மொத்தப் பாடல்களின் கம்போஸிங்கையும் முடித்துக்கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, விரைவில் சென்னைக்கு வந்து அனைத்துப் பாடல்களின் ரெக்கார்டிங்கையும் முடித்துத் தருவதாகவும் சொல்லி அனுப்பினாராம்.


யுவன்சங்கர்ராஜா இஸ்லாமியராக மாறியபோது, மலேசியப் பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தியும் அப்போது அடிபட்டது. அந்த செய்திக்கும், தற்போது மலேசியாவில் யுவன்சங்கர்ராஜா டேரா அடிப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அல்லது மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டாரா யுவன்சங்கர்ராஜா?

0 comments:

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்?



சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர்.

பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் முறிந்து போய் உள்ளது. இந்த நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு, நயன்தாராவை பாண்டியராஜ் ஜோடியாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் இருவரும் சிரித்து பேசுவது போன்ற படங்கள் வெளியாயின. நட்பை புதுப்பித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில்தான் சிம்பு–நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது என்றும், நயன்தாராவுக்கு தாலி கட்டுவது போன்ற திருமண படத்தை மே 1–ந் தேதி சிம்பு வெளியிடப் போகிறார் என்றும் தகவல் பரவி உள்ளது.

ஆனால் பட விளம்பரத்துக்காக இந்த திருமணத்தை நடத்தி உள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். பிறகு அது ‘ராஜா ராணி’ பட விளம்பரத்துக்காக செய்யப்பட்டது என தெரிய வந்தது.

அது போல் சிம்பு, நயன்தாரா திருமணமும் ‘இது நம்ம ஆளு’ படத்தை விளம்பரபடுத்துவதற்காகவே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். திருமண படங்களை வெளியிடும் போது உண்மை தெரிய வரும்.

0 comments:

நடிகை அஞ்சலியின் அதிரடி ரீ- என்ட்ரி...!



நடிகை அஞ்சலி நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்கிறார். வீட்டை விட்டு வெளியேறி சர்ச்சைகளில் சிக்கிய அவர் முன்பு போல் படங்களில் நடிக்கவில்லை.


ஐதராபாத்தில் நடந்த சினிமா பட விழாக்களில் மட்டும் பங்கேற்று வந்தார். அவரது உடல் எடை கூடியது. ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் அமெரிக்கா போய் விட்டதாகவும் செய்திகள் வந்தன.

இந்த நிலையில் தற்போது மீண்டும், நடிக்க வந்துள்ளார். தெலுங்கு படமொன்றில் நடிக்கிறார். கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையையும் குறைத்துள்ளார்.

இதுகுறித்து அஞ்சலி கூறியதாவது:–

நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டேன். இதுவரை நடிக்காத கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருந்தது. இதற்காக கதைகள் கேட்டு வந்தேன். தற்போது நான் விரும்பியபடி ஒரு படம் வந்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படம். எனது கேரக்டர் மிகவும் வலுவானதாக இருக்கும். இதுவரை இது மாதிரி வேடத்தில் நடித்தது இல்லை.

கவர்ச்சியாக நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன். அதே நேரம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடிப்பேன்.

இவ்வாறு அஞ்சலி கூறினார்.

0 comments:

ஆம் ஆத்மியில் சேருவாரா ஜெயம் ரவி...



நிமிர்ந்து நில்’ படத்திற்கு வெளியான கலவையான விமர்சனங்களைத் தாண்டி உற்சாகமாகவே இருக்கிறார் ஜெயம்ரவி. ‘பூலோகம்’, ஜெயம் ராஜா இயக்கத்தில் இன்னொரு படம் என்று பிஸியாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.

‘நிமிர்ந்து நில்’ உங்கள் படவரிசையில் எப்படி?

இந்தப்படம் என் கேரியரில் முக்கிய மான படமாக இருக்க போகிறது என்று கதையைக் கேட்டபோதே முடிவு செய்துவிட்டேன். அது இப்போது உண்மையாகி விட்டது. இந்தப் படத்திற்காக எனக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டு இருக்கிறது. அரவிந்த் கேரக்டரின் சமூகக் கோபமும் உணர்வும் அறியாமையும் எனக்கும் இருந்தது. அதனால்தான் இந்தப்படத்தில் நான் நடிக்க முடிந்தது. சமுத்திரக்கனிக்கும் அது இருந்ததால்தான் இந்தத் திரைக் கதையை அவரால் எழுத முடிந்தது. உங்ககிட்ட இந்த மாதிரி படங்களைத் தான் எதிர்பார்க்கிறோம்னு என்னோட ரசிகர்கள் சொல்றாங்க.

என்னதான் சீரியஸ் கதையைக் கருவைக் கொண்ட படமாக இருந்தாலும் அதை பொழுதுபோக்கு என்ற பார்முலாவுக்குள் அடக்குகிறீர்களே?

நீங்கள் டாக்குமென்டரியை காட்டினால் ரசிகர்கள் தியேட்டருக்கே வரமாட்டார்கள். படம் பார்த்த பத்திரிகையாளர்கள் ஏன் இரண்டாவது பாதியில் ஆட்டம் பாட்டம், காமெடி என்று மாற்றி விட்டீர்கள் என்று கேட்கிறார்கள். அது அவர்கள் பார்வை.

ஆனால் படத்தின் இரண்டாவது பாதியை தியேட்டரில் போய் பாருங்கள். ரசிகர்கள் விசி லடித்து ரசிக்கிறார்கள். சமூகத்துக்கு செய்தி சொல்லும் படங்களை நீங்கள் பொழுதுபோக்குப் படமாகக் காட்டும் போது அதற்கு அதிக பலன் கிடைக்கும்.

பாலா மாதிரி ஒரு இயக்குநரின் படத்தில் நடிக்கும் எண்ணம் இல்லையா?

அது என் கையில் இல்லை. நான் ஏற்று நடிக்க ஏதுவான கதாபாத்திரம் என்று பாலா கருதினால் என்னை கண்டிப்பாக அவர் தெரிவு செய்வார் என்று நம்புகிறேன். ‘நிமிர்ந்து நில்’ படம் பார்த்து விட்டு பாராட்டியவர்களில் பாலாவும் ஒருவர். “படத்தோட க்ளைமாக்ஸ்ல கண்ணாலயே நன்றி சொல்றியே... ரொம்ப ரியலா இருந்துச்சு” என்று அவர் சொன்னது எனக்கு பெரிய பாராட்டு. என்னை இத்தனை கவனித்தவர், ‘என் இயக்கத்தில் நடி’ என்று சொல்ல எத்தனை நேரமாகும்.

உங்கள் கதாபாத்திரத்துக்கு படத்தில் அரவிந்த் என்று பெயர் வைத்திருக் கிறீர்கள்? இது அரவிந்த்கெஜ்ரிவாலின் பாதிப்பில் உருவான கதாபாத்திரமா?

கண்டிப்பாக இல்லை. அரவிந்த் என்பவர் சமுத்திரக்கனியின் காலேஜ் மேட். நிஜவாழ்க்கையிலும் அநீதியைக் கண்டு கொதிக்கும் குணம் கொண்டவர். இங்கே எல்லாமே தப்பா இருக்கு சிலவற்றை மாற்றுவதற்காக இங்கே போராடியிருக்கிறார். ஒருகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பால் அமெரிக்காவில் குடியேறி வாழ ஆரம்பித்துவிட்டார்.


‘அமெரிக்காவில் மட்டும் தவறுகள் நடக்கவில்லையா’ என்று சமுத்திரக்கனி அவரிடம் கேட்டதற்கு, ‘இந்தியாவுடன் ஒப்பிடும்போது இங்கே குறைவுதான்’ என்று கூறியிருக்கிறார். அவரது கதாபாத்திரத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்தே அரவிந்த் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் நியாயத்துக்காக போராடுகிறவர், ஆனால் எந்த வழியில் போராடுவது என்று தெரியாமல் தவிப்பவர். ஷங்கர் சாரின் முதல்வன் படக் கதாபாத்திரத்தின் பிரதிபலிப்புபோல அவரைப் பார்ப்பதை நானும் ரசித்தேன்.

அப்படியானால் ஆம் ஆத்மியில் சேரும் எண்ணம் இருக்கிறதா?

அரசியல் பற்றி என்னைப் போன்ற நடிகர்கள் பேசினால் எல்லாருக்கும் பளிச்சென்று படுகிறது. இவனுக்கு ஏன் இந்த வேலை என்று கேட்கிறார்கள். நான் ஒருமுறை கூட ஓட்டுப்போடாமல் இருந்ததில்லை. என்னளவில் அதுவே போதும் என்று நினைக்கிறேன். கட்சி அரசியல் எனக்கு ஒத்து வராது.

நீங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரம் போலவே, உங்களது நிஜவாழ்க்கையில் கோபம் கொண்டதுண்டா?

சினிமாவில் நுழைவதற்கு முன்புவரை நான் இப்படித்தான் இருந்து வந்திருக்கிறேன். யாருக்கும் லஞ்சம் கொடுக்கக் கூடாது. நாமும் யாரிடமும் சலுகை பெறவும் கூடாது என்று சொல்லித்தான் அப்பா வளர்த்திருக்கிறார். எனக்கு பணம், புகழ் இரண்டுமே சினிமாவில் சீக்கிரமே கிடைத்துவிட்டது. ஆனால் அதை எதை யுமே என் மண்டையில் நான் ஏற்றிக் கொள்ளாதற்குக் காரணம் அப்பாவின் நேர்மைதான். கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை டிராஃபிக் போலீஸாரிடம் நானும் நண்பர்களும் மாட்டிக்கொண்டோம். எல்லோரும் அவர்களது அப்பாக்களின் பெயர் களைச் சொல்லிவிட்டு கிளம்பிவிட் டார்கள். என்னிடம் நீ யார் பையன் என்று கேட்டார்கள்.


நானோ எனது அப்பா பெயரைச் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. அப்படிச் சொன்னாலும் பயனில்லை. நான் தவறு செய்திருப்பதால் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவிடுவார். அதனால் எனக்கு என்ன அபராதமோ அதைக் கட்டிவிடுகிறேன் என்றேன். என் நேர்மைக்கு அந்த இடத்தில் மரியாதை இருந்தது. ‘உன்னை மாதிரியே எல்லோரும் இருந்திட்டா நல்லா இருக்கும் தம்பி’ என்றார் அந்த அதிகாரி. இதை பெருமைக்காக சொல்லவில்லை. நாம் எல்லோருமே தப்பித்துக் கொள்ள நினைப்பதால், நாமெல்லாம் சேர்ந்தே இப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்கி வைத்திருக் கிறோம்.. 

0 comments:

திரிசாவின் நிறைவேறாத ஆசை...!



தென்னிந்தியத் திரைப்படங்களில் ஒரு நடிகையின் ஆயுள்காலம் சுமாராக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள்தான். அதன்பிறகு அவர்களை ஹீரோயினாகப் படங்களில் பார்ப்பது என்பது அரிது. ஹீரோயினாக அறிமுகமான நடிகைகளை, ஆறேழு வருடங்களுக்குப் பின்னர் மெஹா சீரியல்களிலும், அதன்பின்னர் அண்ணி,அம்மா போன்ற வேடங்களிலுமே பார்க்கமுடியும்.


ஓரிரு நடிகைகள் மட்டுமே மேற்கூறிய இந்த வரம்புகளை உடைத்தெறிந்து தொடர்ந்து ஹீரோயினாக நிலைத்து நிற்கின்றனர். அந்த நடிகைகளின் பட்டியலில் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பிடித்துவருபவர் நடிகை திரிசா.


தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் ஹீரோயினாக நடித்துவரும் திரிசா 1999 ஆம் ஆண்டே தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். அறிமுகமாகி சுமார் 14 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து ஹீரோயினாக நடித்துவரும் திரிசா, மற்ற நடிகைகளுடன் ஒப்பிடுகையில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.


தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் அனைவருடனும் நடித்துள்ள திரிசா நடிப்பில் சமீபமாக வெளியான திரைப்படம் என்றென்றும் புன்னகை. இப்படமும் மெஹா ஹிட். இன்றைய இளம் நடிகைகளுடன் தொடர்ந்து போட்டியிட்டுவரும் திரிசா,


சமீபமாக அளித்திருக்கும் பேட்டியொன்றில் இளம் தலைமுறை நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதியுடன் நடிக்கவிரும்புவதாகத் தெரிவித்துள்ளாராம். மேலும் இவ்விரு நடிகர்களும் தங்களுக்குப் பொருத்தமான வேடங்களைச் சாதுர்யமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிபெற்றுவதையும் பாராட்டியுள்ளார்.


ஒருவேளை விரைவிலேயே விஜய்சேதுபதியுடனோ, சிவகார்த்திகேயனுடனோ திரிசா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

தலைவா! மறக்க முடியாத 10 நாட்கள் - விஜய் பேச்சு!



தலைவா திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கியுள்ள திரைப்படம் ‘சைவம்’. நாசர் மற்றும் பேபி சாரா(நிலா) முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடிக்கின்றனர்.


இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் ”சைவம் திரைப்படத்தில் சாராவும், நாசரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சைவம் திரைப்படத்தில் எனது மிகப்பெரிய குறிக்கோள்,


ரசிகர்கள் இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு நிலாவை மறந்துவிட்டு தமிழ் என்ற பெயரை தான் நியாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். சாரா தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


காரைக்குடியில் நடக்கும் ஊர்த்திருவிழாவிற்குச் செல்கிறது தமிழின் குடும்பம். அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. சைவம் திரைப்படம் தலைவாவிற்கு முன்பே எடுக்கப்படவேண்டிய படம். நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதற்காக சைவம் திரைப்படத்தை தள்ளிவைத்துவிட்டு தலைவா எடுத்தேன்.


தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையினால் ஏற்பட்ட வலி சாதாரணமானது அல்ல. காலை பல கனவுகளுடன் தூக்கத்திலிருந்து எழுந்து இரவு வலியுடன் உறங்கச் செல்வது ஒப்புக்கொள்ளமுடியாதது. என் திரையுலக வாழ்க்கையின் மறக்க முடியாத 10 நாட்கள் என்றால் தலைவா பிரச்சனை நடந்த அந்த கால கட்டம் தான்” என்று கூறினார்.


சைவம் என்று டைட்டில் வைத்துவிட்டு போஸ்டரில் சேவலின் படத்தை வைத்திருப்பதும், நாசர், சாரா என ‘தெய்வத்திருமகள்’ கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

0 comments:

சித்தார்த்தை அதிர்ச்சியடைய வைத்த சமந்தாவின் புகைப்படங்கள்



லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சமந்தா படுகிளாமராக நடிப்பதாக செய்திகள் கசிந்தன.


 இதுவரை சமந்தா தமிழில் மிக அதிகளவில் கிளாமராக நடித்தது இல்லை. ஆனால் அஞ்சான் படம் அந்த சாதனையை முறியடித்துவிடும் என்று கூறப்படுகிறது. அதை மெய்ப்பிப்பது போல் சமீபத்தில் சமந்தாவின் கிளாமரான அஞ்சான் பட ஸ்டில்கள் வெளியாகின.

இதை பார்த்த மற்ற தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தங்கள் படத்தில் சமந்தா நீச்சலுடை போன்ற கிளாமரான உடையில் நடிக்கவேண்டும் என கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சமந்தா, “அஞ்சான்” படத்தில் பாடல் காட்சிகளில் மட்டுமே கவர்ச்சி காட்டியுள்ளேன்.


அதுவும் அந்த ஒரு படத்தில் மட்டும்தான். இனிவரும் படங்களில் கிளாமரை தொடரமுடியாது என்று கறாராக கூறிவிட்டாராம். இதற்கு இன்னொரு முக்கிய காரணம், சூர்யாவுடன் படுகிளாமராக நடித்ததை கேள்விப்பட்டு சித்தார்த் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.


ஆனால் அஞ்சான் படத்தில் பாடல் காட்சிகள் மட்டுமின்றி சூர்யாவுடன் மிக நெருக்கமான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படியும் படம் வெளியானது எது உண்மை என்பது தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.

0 comments:

விக்ரமின் அடுத்த படம் - ’இடம் மாறி இறங்கியவன்’



ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் விக்ரம் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


அது மாதிரி ‘கோலி சோடா’


 படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் படம் என்ன?


 அதில் ஹீரோவாக யார் நடிக்கிறார் போன்ற கேள்விகளும் கோலிவுட்டில்


 பரபரத்துக் கொண்டிருக்கிறது.


இந்நிலையில் ‘கோலி சோடா’விற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கும் படத்திற்கு


 ’இடம் மாறி இறங்கியவன்’


என்று பெயர் வைத்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


லேட்டஸ்ட் தகவலின் படி இந்த ஸ்கிரிப்ட் விக்ரமுக்கு ரொம்பவும் பொருந்தும் என்றும்,


அதில் விக்ரமே நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது!

0 comments:

நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருக்கிறேன் - சிவகார்த்திக்கேயன்



சிவகார்த்திக்கேயன், ஹன்சிகா நடித்துள்ள படம், மான் கராத்தே. விரைவில் ரிலீசாக உள்ள இந்தப் படம் பற்றி நிருபர்களிடம் சிவகார்த்திக்கேயன் கூறியதாவது:


ஹன்சிகாவுடன் நடிப்பதால் உடன் நடிக்கும் ஹீரோயின்கள் பற்றி நிறைய கேள்விகளை எதிர்கொள்கிறேன். எனக்கு கதையும், கேரக்டரும்தான் முக்கியமே தவிர, உடன் நடிக்கும் ஹீரோயின் யார் என்று பார்ப்பதில்லை. அடுத்து எனது ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் காஜல் அகர்வால் நடிக்கிறார் என்ற செய்திகள் வருகிறது.


 அவர்களுடன் நடித்தால் சந்தோஷம்தான். ஆனால் ஹீரோயின்கள் விஷயத்தில் கதை விஷயத்தில் தலையிடும் அளவுக்கு நான் பெரிய நடிகன் இல்லை. எந்த ஹீரோயிடனும் நடிப்பேன்.


ஒரு படத்தில் நடித்தோம், சம்பளம் வாங்கினோம் என்று இல்லாமல் நான் நடித்த படத்தால் தயாரிப்பாளரில் இருந்து தியேட்டர் கேன்டீன் ஊழியர் வரை பயன் அடைகிறார்களா என்றும் கவனிக்கிறேன். அதே போல, ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.


மனைவி, குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதால், நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருக்கிறேன். இவ்வாறு சிவகார்த்திக்கேயன் கூறினார். பேட்டியின் போது தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன், இயக்குனர் கே.திருக்குமரன், இசை அமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் சுகுமார் உடன் இருந்தனர்.

0 comments:

உத்தமவில்லன் படப்பிடிப்பு திடீர் ரத்து! பெங்களூரில் இருந்து சென்னை திரும்பியது படக்குழு!!



விஸ்வரூபம்-2 படத்தையடுத்து நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் உத்தமவில்லன்.


இப்படத்தின் படப்பிடிப்பை 90 நாட்களும் பெங்களூரில் நடத்த திட்டமிட்டு கடந்த ஒரு வாரமாக அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். ஆனால் திடீரென படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை வந்தது அப்படக்குழு.


என்ன காரணம்? என்று விசாரித்தபோது, கர்நாடகத்தில் இருக்கும் சலன் சித்ர சினிமா தொழிலாளர் சங்கத்துக்கு போட்டியாக புதிய சங்கம் ஒன்று தற்போது உருவாகியுள்ளதாம்.


ஆனால், அந்த புதிய சங்கத்தை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பழைய சங்கத்தினர் ஸ்டிரைக் நடத்துகிறார்களாம். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் கைவிடப்படாது என்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அமல்படுத்தி உள்ளனர்.


இதன்காரணமாக, கடந்த செவ்வாய்க்கிழமை வரை விறுவிறுப்பாக நடந்து வந்த கமலின் உத்தமவில்லன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சென்னைக்கு வந்து விட்டார்களாம். ஆக, கர்நாடகத்தில் தொழிலாளர் பிரச்னை தீரும் வரை படப்பிடிப்பை சென்னையிலேயே தொடரப்போகிறார்களாம்.


இதனால் 3 மாதங்களாக நடைபெறவிருந்த உத்தமவில்லன் படத்துக்காக மொத்த கால்சீட்டை கொடுத்திருந்த நடிகர்-நகைகள் அடுத்து எப்போது படத்தை தொடங்குவார்களோ என்று பயந்து கொண்டிருந்தவர்கள், உடனடியாக சென்னையில் படப்பிடிப்பு தொடரவிருப்பதால் நிம்மதி அடைந்துள்ளனர்.

0 comments:

மெல்லிசைக்காக ஒரு மாதம் மெனக்கிட்ட விஜய் சேதுபதி...!



இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் படம் மெல்லிசை.


இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரஞ்சித் ஜெயக்கொடி, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். காயத்ரி நாயகியாக நடிக்கிறார்.


இந்த படத்திற்காக விஜய் சேதுபதி ஒரு மாத காலமாக பியானோவை கற்றுக்கொண்டு வருகிறாராம்.


ஐந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, இந்த படத்திற்காக மிகவும் ஆர்வமாக இசையை கற்றுக் கொண்டிருக்கிறார்.


படத்தின் இயக்குனர் ரஞ்சித் கூறுகையில், இந்த படத்தில் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கவிருப்பதால் பியானோ வல்லுநரிடம் முறையாக வாசிக்க கற்று கொண்டார்.


மேலும் காயத்ரியும் வயலின் ஆசிரியராக நடிக்க இருப்பதால் இந்த படத்திற்காக அவரும் வயலின் வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிரார்.


இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க இசை கலந்த மர்ம படமாக உருவாகி வருகிறது மெல்லிசை படம்

0 comments:

ஆந்திராவிலும் ஜெயித்த தல!



அஜித் படங்களுக்கு தமிழகத்தில் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறதோ,


கிட்டத்தட்ட அதே மாதிரியான வரவேற்பு ஆந்திராவிலும் உள்ளது!


 விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘பில்லா’,


 ‘ஆரம்பம்’


போன்ற பல படங்கள் ஆந்திராவிலும் வெளியாகி நல்ல வசூல் செய்துள்ள நிலையில்,


‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான


‘வீரு டொக்கடு’ (வீரம்) படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக


ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகிறது.


இந்த வெற்றிக்கு ஆந்திர ரசிகர்களுக்கு நன்கு அறிந்தவர்களான


‘சிறுத்தை சிவா, அஜித், தமன்னா, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் முதலானோரின்


கூட்டணி அமைப்பும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்!

0 comments:

தி லவ்லி லேடீஸ்’ பாடலுக்கு விஷால்- இனியா , வித்தியாசமான குத்தாட்டம்.



விஷால் -லட்சுமி மேனன் நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த படத்தின் பாடல்களில் தி லவ்லி லேடி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியது. இந்த பாடலை மிக விரைவில் படமாக்க உள்ளனர்.


முதலில் சாதாரணமாக படமாக்க விரும்பிய படக்குழுவினர், இந்த பாடலில் வெற்றியை தொடர்ந்து பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான யூடிவி தனஞ்செயன் அவர்கள் கூறியுள்ளார்.


விஷாலுடன் இந்த பாடலுக்கு நடனம் ஆட இருப்பவர் இனியா. இனியாவின் குத்தாட்டத்தை இந்த படத்தில் வித்தியாசமாக ரசிகர்கள் காணலாம் என படக்குழுவினர் கூறுகின்றனர்.


நூற்றுக்கணக்கான துணை நடிகைகளோடு விஷால்-இனியா ஆடும் இந்த நடனத்தின் படப்பிடிப்பு நாளை முதல் வரும் ஞாயிறு வரை சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடக்கவிருக்கின்றது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் இந்த பாடலோடு முடிகிறது.


அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் வேலை தொடரும் என தனஞ்செயன் கூறியுள்ளார். இந்த படத்தின் இன்னொரு டிரைலர் வரும் 28 ஆம் தேதி வெளிவரும் என்றும், வரும் ஏப்ரல் 11ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்றும் மேலும் அவர் கூறினார்.

0 comments:

மலையாள சேச்சியுடன் தனுஷ்...!



அனேகன் படத்தில் மலையாள உலகில் இருந்து குணச்சித்திர நடிகை ஒருவர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்.


மலையாள சினிமாக்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகைதான் லேனா.


அக்காவாக, அண்ணியாக, இரண்டாவது கதாநாயகர்களின் மனைவியாக ஏதாவது ஒருவகையில் இவரது பங்களிப்பு மலையாள சினிமாக்களில் இருந்துகொண்டே இருக்கும்.


தமிழில் ரீமேக்கான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் பிரகாஷ்ராஜின் மனைவியாக ராதிகா ஏற்றிருந்த கேரக்டரை தன் ஒரிஜினலான மலையாள படமான ‘ட்ராஃபிக்’கில், ரகுமானின் மனைவியாக ஏற்று நடித்தவர் இவர்தான்.


இப்போது இவர் தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படம் மூலமாக தன் காலடியை எடுத்து வைத்திருக்கிறார்.

0 comments:

விரட்டு - திரைவிமர்சனம்...! ‘விரட்டு’ வேகம் கம்மிதான்...



நடிகர் : சுஜிவ்

நடிகை : எரிகா பெர்னான்டஸ்

இயக்குனர் : டி.குமார்

இசை : தரண்குமார்

ஓளிப்பதிவு : பிரசாத்

நாயகன் சுஜீவ் தாய்லாந்தில் மிகப்பெரிய திருடன். ஒருநாள் திருடிவிட்டு ஓடிவரும்போது அவனை நாயகி எரிகா காப்பாற்றுகிறார். சுஜீவ் திருடன் என்று தெரிந்திருந்தும் அவனுடன் நட்புடன் பழகி வருகிறார் எரிகா. ஒருகட்டத்தில் இருவரும் இந்த திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு எங்காவது சென்று ஓட்டல் ஆரம்பிக்கலாம் என முடிவெடுக்கின்றனர்.

அதன்படி, ஒரு ரெயிலில் ஏறி பயணமாகிறார்கள். அதே ரெயிலில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு எரிகாவுக்கு நன்கு அறிமுகமான சுமன் ஷெட்டியும் பயணமாகிறார். சுமன் பணம் கொண்டு வருவது தெரிந்தவுடன் அதை பத்திரமாக கொண்டு சேர்க்க எரிகாவும் உறுதி தருகிறார். ஆனால், நாயகனுக்கோ அந்த பணத்தின் மீது ஒரு கண் இருக்கிறது.

இந்நிலையில், அதே ரெயிலில் தாய்லாந்து ராணியின் கழுத்தில் கிடந்த கறுப்பு வைரத்தை திருடிய கும்பல் பயணிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்க, அந்த கும்பலை பிடிக்க ரகசியமாக போலீசும் பயணம் செய்கிறது. இந்நிலையில், சுமனின் பணத்தை திருட ஒரு கொள்ளை கும்பலும் முயற்சிக்கிறது.

அந்த கொள்ளைக் கும்பலிடம் இருந்து நாயகிக்காக சுமனின் பணத்தை காப்பாற்றுகிறான் சுஜீவ். இதனால் நாயகன் மீது நாயகிக்கு காதல் வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் நாயகனுக்கும் அந்த பணத்தின் மீது ஆசை வந்துவிட, நாயகிக்கு தெரியாமலேயே அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, பணம் திருடு போய்விட்டதாக நாயகியிடம் நாடகமாடுகிறார். ஆனால், நாயகிக்கு நாயகன்தான் அந்த பணத்தை திருடியது என்பது தெரிந்துவிடுகிறது. நாயகனுடன் சண்டைபோட்டு அந்த பணத்தை வாங்கி சுமனிடம் ஒப்படைக்கிறார். நாயகன் மீது வெறுப்பும் கொள்கிறார். இருந்தாலும், சுமனிடம் உள்ள பணத்தை கைப்பற்ற கொள்ளைக் கும்பல் தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறது.

இந்த முயற்சியை நாயகன் முறியடித்தாரா? நாயகனும், நாயகியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? கறுப்பு வைரத்தை திருடிய கும்பலை போலீஸ் பிடித்ததா? என்பதே மீதிக்கதை.

நாயகன் சுஜீவுக்கு இளம் ஹீரோவுக்குண்டான அத்தனை அம்சமும் இருக்கிறது. ஆனால், நடிப்பு தான் வரவில்லை. குறிப்பாக நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் ரொம்பவும் செயற்கைத்தனமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமே காட்டாமல் நடித்திருப்பது பார்க்க சலிப்பை ஏற்படுத்துகிறது.

நாயகி எரிகா அழகாக இருக்கிறார். இவருக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. இருந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சோகமான காட்சிகளில் நடிக்க கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார். சுமன் ஷெட்டிக்கு ரொம்பவும் அப்பாவியான கதாபாத்திரம். குழந்தைத்தனமான நடிப்பில் அசத்துகிறார். துப்பறியும் நிபுணராக வரும் மனோபாலா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மிரட்டியிருக்கிறார். அவருக்கு உதவியாளராக வரும் பெண் கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்.

ஒரு ரெயிலுக்குள்ளேயே படம் முழுவதையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டி.குமார். ரெயிலுக்குள்ளேயே இவ்வளவு வித்தியாசமான காட்சியமைப்புகளை காட்டமுடியுமா? என்பதில் வென்றிருக்கிறார். ஆனால், ஆக்ஷன் கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் தோல்வி கண்டிருக்கிறார். இறுதிக்காட்சியில் முரட்டு வில்லனை ஒல்லிப்பிச்சான் ஹீரோ அடித்து துவம்சம் செய்வதை ரசிக்க முடியவில்லை.

தரணின் இசை படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது. ஆண்ட்ரியா பாடிய பாடல் அருமை. ஆனால், அந்த பாடலை இறுதியில் வைத்து கடைசி வரை படத்தை பார்க்க வைத்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இவரது கேமரா ரொம்பவும் பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘விரட்டு’ வேகம் கம்மிதான். 

0 comments:

தமன்னா எம்.எம்.எஸ் வீடியோ வெளியானதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு



பாலிவுட் நடிகைகள் சிலரின் எம்.எம்.எஸ் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தாங்களே வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு பரபரபப்பை ஏற்படுத்தினர்.


இதே போல் சில நடிகர், நடிகைகளின் பெயர்களை கலங்கப்படுத்த அவர்களை போன்ற தோற்றமுடையவர்களை வைத்து ஆபசமாக காட்டி இணையத்தில் வெளியிட்டும் உள்ளனர். த்ரிஷா, சிம்ரன், நமீதா, மீனா, ஜோதிகா, ஏ.ஆர். முருகதாஸ் போன்ற பிரபலங்கள் ஏற்கனவே இந்த போலி வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.


அந்த வரிசையில் தற்பொழுது நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார். இரண்டு நாட்களாக முகநூலில் தமன்னா உருவத்தில் உள்ள ஒரு பெண் ஆடையின்றி மசாஜ் செய்து கொள்வது போன்ற வீடியோ வெளியானது.


இது குறித்து நடிகை தமன்னாவை தொடர்பு கொண்ட போது, அவருடைய மேனேஜர் தான் பதிலளித்தார்.


வீடியோ பற்றி தமன்னாவின் மேனேஜர் கூறியதாவது,


பிரபலங்களின் பெயர்களை கலங்க படுத்த இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு அவப்பெயர் ஏற்படுத்துவார்கள். அது போன்றே இதுவும் போலி வீடியோ தான். இது குறித்து விவாதிக்க தமன்னாவிற்கு நேரமில்லை. அவர் நடிப்பில் பிஸியாக உள்ளனர் என தெரிவிதுள்ளார்.

0 comments:

அஞ்சான் படத்தில் அயிட்டம் டான்ஸ் ஆடும் ஆண்ட்டி நடிகை..!



லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் ஒரு குத்துப்பாடல் இடம்பெறுகிறது.

மும்பைக்கு அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் மிகப்பிரம்மாண்டமாக செட் போட்டு இப்பாடல்காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.

 யுவன்சங்கர்ராஜா இசையமைப்பில், விவேகா எழுதிய, சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி...

சில்க் ஸ்மிதா என் கம்யூனிட்டி என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு சூர்யா உடன் குத்தாட்டம் போட்டிருப்பவர் பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங்.

2003 ஆம் ஆண்டிலிருந்து நடித்து வரும் சித்ரங்கதா, கடந்த 10 ஆண்டுகளில் நடித்தது வெறும் எட்டே படங்கள்தான்.

அவற்றில் தேஸி பாய்ஸ் என்ற படத்தில் ஜான் ஆப்ரகாமுக்கு ஜோடி.

அந்தப் படத்தில் ஜான் ஆப்ரகாமுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் சித்ரங்கதா.

தவிர ஏர்டெல் உட்பட ஏராளமான விளம்ரபடங்களிலம் நடித்தவர் இவர்.

முக்கியமான விஷயம்...சித்ரங்கதாவுக்கு திருமணமாகிவிட்டது.

 உலகின் டாப் 100 கோல்ஃப் விளையாட்டு வீரர்களில் ஒருவரான ஜோதி சிங் என்பவரை 2005 ஆம் ஆண்டில் மணந்து, கடந்த ஆண்டு விவாகரத்து செய்தவர்.

லிங்குசாமி ஸார்.. அஞ்சான் படத்தில் ஒரு ஆண்ட்டியை அயிட்டம் டான்ஸ் ஆட வச்சிருக்கீங்களே..ஞாயமா ஸார்..!

0 comments:

அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்! அட உண்ம தாங்க...!



நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தை வெகு சீக்கிரத்திலேயே தொட்டுவிட்டார் சிவகார்த்திகேயன்!


 வசூலில் பல வருடங்களாக முறியடிக்கப்படாத ஆல் டைம் ரெக்கார்டாக இருந்த கரகாட்டக்காரன் படத்தின் வசூலை சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் முறியடித்ததும்...


அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் மான் கராத்தே படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பும்.. அடுத்தடுத்து அவர் ஒப்புக்கொண்டிருக்கும் படங்களும்... இப்படி பல விஷயங்கள் ஒன்றாக சேர்ந்ததினால்,


திரையுலகில் சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்த்து ஜிவ்வென உயர்ந்து கொண்டே இருக்கிறது. எந்தளவுக்கு?


சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் நாலரை கோடிக்கு விலைபோனது. தற்போது அவர் நடித்து வரும் மான் கராத்தே படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் ஒன்பது கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.


சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் டானா படம் இன்னும் தொடங்கப்படவே இல்லை. அதற்குள் அந்தப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை பதிமூணு கோடிக்கு விற்று, காசை கல்லாப்பெட்டியில் போட்டுவிட்டார் டானா படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ்.


இந்த அசுரத்தனமான வளர்ச்சி சிவகார்த்திகேயனுக்கு தலையில் வெயிட்டை ஏற்றாமல் இருக்கணும்..!

0 comments:

Copyright © 2013 Cine Ulagam and Blogger Templates - Anime OST.