மீண்டும் கார்த்தியுடன் கைகோர்க்கும் லிங்குசாமி..!



‘பையா’ வெற்றிக்குப்பின் லிங்குசாமி மீண்டும் கார்த்தியுடன் கைகோர்க்கவுள்ளார். தற்போது லிங்குசாமி சூர்யாவை வைத்து ‘அஞ்சான்’ படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து 2007-ல் வெளியான ‘பையா’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

அதிலுள்ள பாடல்களும் ரசிகர்கள் மனதில் பெறும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தொடங்கவுள்ளது.

’அஞ்சான்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் லிங்குசாமி இப்படத்தை எடுக்கவுள்ளார். ‘பையா’ வெற்றியைப்போல இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

20 நாட்களுக்கு ரூ.20 கோடி. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தீபிகா படுகோனே...!



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் ‘கத்தி’ திரைப்படத்தை அடுத்து ‘சிம்புதேவன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ப்ரியங்கா சோப்ராவிடம் முதலில் பேசப்பட்டது. ஆனால் ப்ரியங்கா சோப்ராவிற்கு வரும் 2016ஆம் ஆண்டு வரை கால்ஷீட் நிரம்பியிருப்பதால், விஜய் படத்திற்கு அவரால் கால்ஷிட் கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில் இயக்குனர் சிம்புதேவன், மும்பை சென்று தீபிகா படுகோனேவை நேரில் சந்தித்து பேசியதாக தெரிகிறது. தீபிகா படுகோனேவிடம் கதையை சொன்ன இயக்குனர் சிம்புதேவன், 20 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்று கூற, அதற்கு தீபிகா கேட்ட சம்பளத்தொகைதான் இயக்குனரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நாள் ஒன்று ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றும் 20 நாட்கள் கால்ஷீட் தேவையென்றால் ரூ.20 கோடி சம்பளம் தேவையென்றும் தீபிகா கூறியதால் சிம்புதேவன் அதிர்ச்சி அடைந்தார். தீபிகாவின் சம்பளத்தை கேள்விப்பட்டு விஜய்யும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

ஆறுமாத காலம் கால்ஷீட் கொடுக்கும் விஜய்க்கே ரூ.20 கோடி சம்பளம் என்ற நிலையில் 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ.20 கோடியா? என்ற அதிர்ச்சியில் உள்ளார் இயக்குனர் சிம்புதேவன்.

பின்னர் தயாரிப்பாளரின் ஆலோசனைப்படி கோலிவுட் கதாநாயகி ஒருவரையே தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமன்னா அல்லது ஹன்சிகாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

0 comments:

மாமியாரைவிட எனக்கு மணிரத்தினம் தான் முக்கியம் - ஐஸ்வர்யாராய் அதிரடி முடிவு...!



மாமியார் ஜெயா பச்சனின் எதிர்ப்பை மீறி மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை மணந்தபிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார் ஐஸ்வர்யாராய். அவரை மீண்டும் படத்தில் நடிக்க பல்வேறு இயக்குனர்கள் அழைப்புவிடுத்தனர்.

ஆனால் குழந்தை ஆரத்யாவை வளர்க்க வேண்டியதால் ரீ என்ட்ரி வாய்ப்பை ஏற்காமல் இருந்தார். குழந்தை வளர்ந்து பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்த நிலையில் அவர் மீண்டும் நடிக்க முடிவு செய்து சரியான வாய்ப்புக்காக காத்திருந்தார். ஆனால் மீண்டும் நடிக்கக்கூடாது என்று மாமியார் ஜெயா பச்சன் கூறியதால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.

மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்ய முடிவு செய்திருந்தார் ஐஸ்வர்யா ராய். இந்நிலையில மாமியாருடன் மனக்கசப்பு முற்றும் நிலை உருவானதால் மணிரத்னம் படத்திலிருந்து விலக எண்ணி இருந்தார்.

இதையடுத்து மணிரத்னமும் வேறு நடிகையை தேட முடிவு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஐஸ்வர்யாராய் கை ஓங்கியது. ரீஎன்ட்ரிக்கு ஓகே சொன்னார். இதையடுத்து மாமியார் ஜெயாபச்சன் கப் சிப் ஆனார்.

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பதை மணிரத்னத்தின் மனைவி சுகாசினி உறுதி செய்ததுடன் மகேஷ்பாபு, நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடிப்பதையும் உறுதி செய்தார். வரும் ஜூன் மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்று அவர் தெரிவித்திருக்கிறார். உளவாளி கதைக்கருவுடன் ஆக்ஷன் படமாக உருவாகும் இதன் ஷூட்டிங் இந்தியா மற்றும் சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

0 comments:

கோச்சடையானில் என் அப்பாவைவிட அனிமேஷன் தான் அதிகம் - சௌவுந்தர்யா..!



ரஜினிகாந்தின் நடிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக அவதார், டின்டின் படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்சரிங் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், படத்தின் இயக்குனர் சவுந்தர்யா மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கோச்சடையானில் என் தந்தை நடித்தது, படத்தை இயக்கும் நான் அவரது மகள் என்பதால் அல்ல. கதை மற்றும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதன்பிறகே நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை சிறப்பாக இயக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. என் தந்தையும் அனுமதி அளித்தார். எனது முதல் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு அவரது ஆசீர்வாதம் கிடைத்துள்ளது.

இது ஒரு கமர்ஷியல் படம் என்பதுடன் தொழில்நுட்பமும் புதிது. ஆனால், ரஜினிகாந்த் கதை போன்று இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கமர்ஷியல் படத்திற்கு நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டிருப்பது நமக்கு இதுவே முதல் முறையாகும்.

ராணா பட வேலைகளை தொடங்கியபோது என் தந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குணமடைந்து வந்த பின்னர் அவருக்கு உடல் அளவிலான அதிக அழுத்தங்களை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில், ராணா வரலாற்றுப் படம்.

கோச்சடையான் அதற்கு முந்தைய காலகட்டத்தின் படம். கோச்சடையான் ராணாவின் தந்தை. அதனால் கோச்சடையான் முதலில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், என் தந்தைக்கு அழுத்தத்தை குறைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்தோம். நேரடியாக காட்சிகளில் நடிப்பதை ஒப்பிடுகையில் இது எளிதானது.

இவ்வாறு சௌவுந்தர்யா கூறினார். 

0 comments:

அர்னால்டாக்கும் ஐ படத்துக்கும் என்னங்க சம்மந்தம்..? எதுக்கு இந்த வீண் விளம்பரம்..!



கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கமல்-அசின் இணைந்து நடித்த படம் தசாவதாரம். அந்த படத்தில் கமல் பத்து விதமான மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்திருந்தார்.

அப்படத்தின் ஆடியோ விழா சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானை வரவைத்து வெளியிட்டார்கள். அது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பதிவானது.

 அதையடுத்து, தசாவதாரம் படத்தை தயாரித்த அதே ஆஸ்கர் பிலிம்ஸ் தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாரித்து வரும் ஐ படத்தின் ஆடியோ விழாவையும் பிரமாண்டப்படுத்த முடிவு செய்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக, இந்த முறையும் ஒரு சர்வதேச நடிகரை ஐ படத்தின் ஆடியோ விழாவுக்கு அழைக்க அப்பட தயாரிப்பாளரான ரவிச்சந்திரன் முடிவு செய்திருக்கிறாராம்.

ஆனால் அந்த சர்வதேச பிரபலம் ஹாலிவுட் நடிகர் அர்னால்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது ஐ படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து கொண்டிருப்பதால், விரைவில் ஆடியோ விழா பற்றியும் அதில் கலந்து கொள்ளும் உலக பிரபலங்கள் பற்றியும் வெளியிட இருக்கிறார்களாம்.

0 comments:

Copyright © 2013 Cine Ulagam and Blogger Templates - Anime OST.